• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (Sivappu Kazhuthudan Oru Pachai Paravai)

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (Sivappu Kazhuthudan Oru Pachai Paravai)

Kalachuvadu Publications

Buy this 168-page paperback edition by அம்பை , today!

  • Publish Date

    21 Aug, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    168 Pages

About This Book

அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. Sivappu kazhuthudan oru Pachai paravai or A Green bird with red nape, is the seventh short story collection by renowned writer Ambai. Many among this thirteen stories are published for the first time.

About The Author

அம்பை (டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி) வரலாற்றாசிரியர். புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் ‘The Face Behind the Mask’, ‘The Singer and the Song’, ‘Mirrors and Gestures’ என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013). அம்பையின் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘A Purple Sea’, ‘In a Forest, A Deer’, ‘Fish in a Dwindling Lake’ என மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் ‘Fragrance of Peace’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (Sivappu Kazhuthudan Oru Pachai Paravai)
அம்பை
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (Sivappu Kazhuthudan Oru Pachai Paravai)
அம்பை
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website