• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
தெய்வங்களும் சமூக மரபுகளும் ( Theivangalum Samooga Marapugalum)

தெய்வங்களும் சமூக மரபுகளும் ( Theivangalum Samooga Marapugalum)

Kalachuvadu Publications

Buy this 96-page paperback edition by தொ. பரமசிவன், today!

  • Publish Date

    21 Aug, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    96 Pages

About This Book

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். The deities which are based on the beliefs since the time of their origin have developed their respective traditions over time thanks to various social practices and social divisions.

About The Author

தொ. பரமசிவன் (பி. 1950) தொ.ப. என்று அழைக்கப்படும் பேராசிரியர் தொ. பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவர். இவருடைய ‘அழகர் கோயில்’ அது வரையிலான கோயில் ஆய்வு நூல்களின் எல்லைகளை விஸ்தரித்தது. பல குறுநூல்களையும் தொ.ப. எழுதியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ள தொ.ப. தற்போது பாளையங்கோட்டையில் வசிக்கிறார்.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
தெய்வங்களும் சமூக மரபுகளும் ( Theivangalum Samooga Marapugalum)
தொ. பரமசிவன்
தெய்வங்களும் சமூக மரபுகளும் ( Theivangalum Samooga Marapugalum)
தொ. பரமசிவன்
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website