Publish Date
21 Aug, 2025
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். VOC, who challenges the British Empire by running a ship company on his own, was arrested by British Police because of his involvement in freedom struggle. Hearing the news of the arrest, people in Tirunelveli and Tuticorin got agitated and rioted. They took to the streets and destroyed government properties. The government suppressed this uprising with an iron hand. Four people were killed in the firing. More than a hundred people were arrested.