• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (Thi. Janakiraman Kurunovelkal)

By தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (Thi. Janakiraman Kurunovelkal)
Price$18.00

Love this book? Share it — unlike Amazon, தி. ஜானகிராமன் keeps 75%+ of every sale.

About This Book

"நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல். ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன. சுகுமாரன்" Thi.Janakiraman was a literary auteur fondly remembered by Tamil readers for his nuanced short stories and powerful novels. His genius was equally expressed in the form of novellas too. They had both the nuances found in his short stories, and the wide thematic landscapes of his novels. This collection of seven novellas talk about relationships, their complications, spiritual anxieties, feeling of fulfillment and various twists and turns of the human mind.

Details
Author
தி. ஜானகிராமன்
Release date
2 Sep, 2025
Publisher
Kalachuvadu Publications
Type
Paperback
Dimensions
5.5 in - 8.5 in
Pages
336 Pages
About The Author

தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website