List Price
$10.00

மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் அடையாளம்: டி.எம். கிருஷ்ணா சங்கீத கலாநிதி விருது பெற்றதையொட்டிய சர்ச்சைகளின் பின்புலத்தில் கிருஷ்ணாவின் மியூசிக் அகாடமி கச்சேரியும் கருத்தரங்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கச்சேரியிலும் கருத்தரங்குகளிலும் அப்படி என்ன நடந்தது, அதிலிருந்து பெறக்கூடிய செய்திகள் என்ன என்பவற்றைத் தலையங்கம் அலசுகிறது. அதீத எதிர்வினைகளின் ஆபத்து: அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற விவாதங்களிலும் சட்ட ரீதியான முன்னெடுப்புகளிலும் உள்ள பிரச்சினைகளை அலசுகிறது இரண்டாவது தலையங்கம். ஆவாராவும் சோஷலிசமும்: ராஜ் கபூரின் ஆவாரா திரைப்படம் சீனாவில் பெற்ற வரவேற்பை நினைவுகூரும் கட்டுரை அது தொடர்பான பல சுவாரஸ்யமான சங்கதிகளை முன்வைக்கிறது. ராஜ் கபூரின் நூற்றாண்டையொட்டி வெளியாகும் கட்டுரை இது. காலச்சுவடு 300: பாரதியியலுக்குக் காலச்சுவடு ஆற்றிவரும் அரிய பங்களிப்பு குறித்த விரிவான சித்திரத்தைத் தருகிறார் ஜெ. சுடர்விழி. அம்பலம்: முனைவர் பட்ட ஆய்வுகளில் நடக்கும் மோசடிகளைக் கார்த்திக் ராமச்சந்திரன் கவனப்படுத்துகிறார். பதிவுகள்: வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா, பெருமாள்முருகன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம், சென்னைப் புத்தகக் காட்சியில் காலச்சுவடு அரங்கில் நடந்த நிகழ்வுகள் ஆடுகளம்: சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்ட வாழ்வின் ஆச்சரியங்களையும் புதிர்களையும் அலசுகிறார் தினேஷ் அகிரா. கதைகள்: குமாரநந்தன், மாஜிதா கவிதைகள்: டோனி பிரஸ்லர் அஞ்சலி: எம்.டி. வாசுதேவன் நாயர், ஷ்யாம் பெனகல், மன்மோகன் சிங்