List Price
$14.00

தலையங்கம்: ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவை முன்வைத்து அலசும் தலையங்கம். சிறப்புப் பகுதி 36+: காலச்சுவடு 300 இதழ் நிறைவடைந்து 36ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதழின் பண்பாட்டுத் துறைகள் சார்ந்த பங்களிப்பு குறித்த பதிவுகள். • மொழி வளர்ச்சியும் காலச்சுவடும் (சு. இராசாராம்) • காலத்தில் மறையாத காந்தியின் சுவடுகள் (சுனில் கிருஷ்ணன்) • கதவைத் திறந்து வைத்த காலச்சுவடு (ஜெ. பாலசுப்பிரமணியம்) • காலச்சுவடும் சூழலியலும் (சித்ரா பாலசுப்பிரமணியன்). நேர்காணல்கள்: செந்தீ நடராசன்: ‘கற்களுடன் மோதிக் கல்வெட்டைக் கற்றேன்’ சந்திப்பு: அரவிந்தன் கல்வெட்டுகளை ஆராய்வது, கல்வெட்டுகளைப் படிப்பது எப்படி என்று பயிற்சி தருவது, வானியல், சோதிடம் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கல்வெட்டு ஆய்வாளர் செந்தீ நடராசனின் நேர்காணல். அமோஸ் கோல்ட்பெர்கின்: ‘ஆம், இது இன அழித்தொழிப்புதான்’ தமிழில்: க. திருநாவுக்கரசு காஸா, இஸ்ரேல் போரைக் கடுமையாக விமரிச்சித்துவரும் இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் அமோஸ் கோல்ட்பெர்கின் நேர்காணலின் மொழிபெயர்ப்பு. கட்டுரைகள்: • பழைய கதைகள்: சமகால முக்கியத்துவங்கள் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா • கேரளத் தோல்பாவைக் கூத்தில் தமிழ்ப் பனுவல்கள் - அ.கா. பெருமாள் புத்தகப் பகுதி: • ஜியாவுதீன் ஸர்தார் எழுதிய ‘நபிகள் நாயகம் சில முக்கியக் குறிப்புகள்’ கட்டுரைகளிலிருந்து ஒரு பகுதி. • மு. குலசேகரன் எழுதிய ‘தங்க நகைப் பாதை’ நாவலிலிருந்து ஒரு பகுதி, • வி. சுதர்ஷன் எழுதிய ‘குற்றமும் அநீதியும்’ அனுபவக் கட்டுரை நூலிருந்து ஒரு பகுதி. மதிப்புரைகள்: • ‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’ (கட்டுரைகள்) தியடோர் பாஸ்கரன் • ‘கற்றதால்’ (நாவல்) சுப்பிரமணி இரமேஷ். பதிவுகள்: • பெங்களூர் கவிதைத் திருவிழா • அம்பை - 80 சிறுகதைகள்: • தற்கொலை மகாத்மியம் - யுவன் சந்திரசேகர் • சங்கு - சுஜாதா செல்வராஜ் • கடல் பின்வாங்கிய காலத்தில் - வஜ்ர சந்திரசேகர (தமிழில்-எழுத்துக்கினியன்) கவிதைகள்: • சுகுமாரன் • சல்மா • இலட்சுமண பிரகாசம் அஞ்சலி: • ஜாகிர் ஹுசைன் (சுகுமாரன்) • ஜெயபாரதி (தியடோர் பாஸ்கரன்)