List Price
$10.00

இரும்பின் தொன்மை: அண்மையில் வெளியான ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை முன்வைத்து விவாதிக்கும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மாத்ருபூமி இதழில் வெளியான பி.எஸ். நவாஸின் கட்டுரையும் பி.ஏ. கிருஷ்ணன் எழுதியுள்ள ‘அரசியல் குழியில் அகழாய்வு’ என்னும் கட்டுரையும் தமிழக வரலாற்றில் இரும்பின் பயன்பாடு குறித்த சான்றாதாரங்களை முன்வைத்துப் பேசுகின்றன. ஆணவம் மூட்டிய தீ: தலித் சமூகத்தினர்மீது கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்கள், ஆணவக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் சாதித் திமிரையும் வெறுப்பையும் தலையங்கம் அலசி ஆராய்கிறது. உணவுப் போலிச் செய்திகளும் அதன் அரசியலும்: மேலை நாடுகளில் சைவ உணவு முறை முற்போக்குத்தனத்தைக் கொண்டிருப்பதையும் இந்தியாவில் உணவு முறை சாதி உள்ளடக்கில் சமூக அமைப்பில் உணவுப் போலி அரசியலாக உருமாறிவருவதையும் அரசியல் பார்வையோடும் சாதிய அரசியலோடும் விரிவாக ஆராயும் கட்டுரை. தோ. டால்டன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை உணவும் சாதியும் எவ்வாறு இணைந்துள்ளன என்பதையும் கூறுகிறது. கல்விப்புல ஆய்வுகள் - ஞா. குருசாமி: கல்விப்புலத்தில் ஆய்வு மாணவர்கள் எழுதும் கட்டுரைகளைப் பணம் வாங்கிக்கொண்டு பிரசுரம் செய்யும் சில பத்திரிகைகளையும் சுயமாக எழுதத் தெரியாத ஆய்வு மாணவர்களின் நிலையையும் விவரிக்கும் இந்தக் கட்டுரை கல்விப்புலத்தில் நிலவும் கீழ்த்தரமான போக்குகளை விவரிக்கிறது. மந்தையிலிருந்து ஒரு குரல்: ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா குறித்து யாவரும் பதிப்பகத்தின் பதிப்பாளர் ஜீவ கரிகாலன் தனது அனுபவத்தையும் பதிவு செய்துள்ளார். மதிப்புரை: இமையத்தின் உப்பு வண்டிக்காரன் நாவல் குறித்த சுடர்விழியின் மதிப்பீடு கவிதைகள்: பெரு. விஷ்ணுகுமார் கதைகள்: மு.சாகுல் ஹமீது, கார்த்திக் பாலசுப்ரமணியன்