List Price
$10.00

காலச்சுவடு இதழ் 304 (2025 ஏப்ரல்) இளையராஜாவின் இசை மக்களின் அன்றாடத்திலும் வாழ்விலும் உணர்பூர்வமாகக் கலந்திருப்பது. அவருடைய ‘வேலியண்ட் சிம்பொனி 1’ இசைக் கோவை மார்ச் 8 அன்று அரங்கேறியது. இந்நிகழ்வை முன்வைத்து அவருடைய இசைப் பயனையும் பயணத்தையும் தலையங்கம் நினைவுகூர்கிறது. நீதிமன்றங்களின் நீதி: கோயில்களில் சாதி சார்ந்து மரியாதை அளிக்கப்படுவதையும் சாதியத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும் அலசுகிறது இரண்டாம் தலையங்கம். சிறப்புப் பகுதி: தலித் வரலாற்று மாதம் கீழ்ப்படிதலின் இசை - டி. தருமராஜ் ஆதி திராவிடர் இயக்கம் தேக்கநிலைக்கு நகர்கிறதா? - கோ. ரகுபதி தலித் வரலாற்றியலில் உள்ளூர் ஆவணங்கள் - ஸ்டாலின் ராஜாங்கத்தின் தலித்துகளும் இலக்கியமும் - ஞா. குருசாமி நேர்காணல்: பவுத்த அரசியல் செயற்பாட்டாளர் மு.பெ. முத்துசாமி மதிப்புரை: நித்தியவல்லியின் கடனக்கழிப்பு நூல் அறிமுகம்: காடன் கண்டது, அலைமோதும் நினைவுகள், தகவல் பிழைகளும் புரட்டுகளும் மறுப்புகளும், நெல்லைச் சீமையின் நாட்டார் நிகழத்துக் கலைகள் அனுபவம்: புத்தகங்கள், வாசகர்கள், சக பயணிகள் - கே. அய்யாசாமி. அஞ்சலி: இரா. நாறும்பூநாதன் - களந்தை பீர்முகம்மது; நந்தலாலா - ஸ்டாலின் சரவணன் கதைகள்: உள்குரல் - ஹான் காங் (தென்கொரிய எழுத்தாளர்), தமிழில்: ஷாலினி பிரியதர்ஷினி; ஒரு ரமளான் இரவு - குளச்சல் யூசுப் கவிதைகள்: இன்பா