List Price
$10.00

காலச்சுவடு இதழ் 306 (2025, ஜூன்) கனன்றுகொண்டிருக்கும் எரிமலை: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய மோதல்களையும் அதன் விளைவுகளையும் விரிவாக அலசி ஆராய்கிறது தலையங்கம். பானு முஷ்தாக்: 2025ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக்கின் அறிமுகத்துடன் அவருடைய படைப்புலகையும் மொழி வடிவம் குறித்த பார்வையையும் அறிமுகம் செய்கிறார் ப. சகதேவன். திரை: "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படத்தின் வசனத்தில் பயன்படுத்தப்படும் இலங்கைத் தமிழ் குறித்து காத்திரமான விமர்சனத்தை சச்சிதானந்தன் சுகிர்தராஜா முன்வைக்கிறார். படைப்புகளின் தொடர்பு வலை: அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆங்கிலச் சிறுகதை ஒன்றை, 22 ஆண்டுகளுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே தொடர்வதை விவரிக்கிறார் அம்ஷன் குமார். போரும் தேசமும்: 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று பி. கோவிந்த பிள்ளை விருது விழாவில் உரையாற்றிய அருந்ததி ராயின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து எழுத்து வடிவமாக்கியுள்ளார் ஜி. ஏ. கௌதம். மதிப்புரைகள்: சிரமமான காரியம் (க.நா. சுப்ரமண்யம் மொழிபெயர்ப்பு முன்னுரைகள்) - எஸ். செந்தில்குமார் கேரள பழங்குடிக் கவிதைகள் - ரா. சின்னத்துரை வீரப்போர் மங்கை குயிலி - எஸ். பால்ராஜ் யாக்கை - கிருஷ்ணமூர்த்தி சிறுகதைகள்: பெருந்தேவி (மயானக் கொள்ளை) சுஜா செல்லப்பன் (தாழொடு துறப்ப) சுஜாதா செல்வராஜ் (வெள்ளைச் சீலை) கவிதைகள்: நந்தன் கனகராஜ் ஜோசப் செல்வராஜ் பஹ்தியார் ஹதாயத் (தமிழில்: க.மோகனரங்கன்) அஞ்சலி: குமார் அம்பாயிரம் - கண்டராதித்தன்