List Price
$10.00

தலையங்கம்: ‘தக் லைப்’ திரைப்பட விழாவில் நடிகர் கமல் ஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்று பேசியதை ஒட்டி எழுந்த சர்ச்சையை அலசுகிறது. இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மொழியியல் அறிஞர்கள் சு. இராசாராம், இ. அண்ணாமலை ஆகியோரின் விரிவான கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. சின்மயி ஏன் பாடக் கூடாது: ஒரு பெண் பாலியல் புகார் தரும்போது ஏன் அவர் தனிமைப்படுத்தப்படுகிறார், அவரை ஏன் இந்த உலகம் புறக்கணிக்கிறது என்பதைத் துணைத் தலையங்கம் ஆராய்கிறது. நூல் அறிமுகம்: இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள கு. அழகிரிசாமியின் கட்டுரைகள் தொகுப்பைக் குறித்து எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் விரிவாகப் பேசுகிறார். ஹெப்ஸிபா ஜேசுதாசன் 100 : நூற்றாண்டு காணும் ஹெப்ஸிபா ஜேசுதாசன் 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘புத்தம் வீடு’ நாவலை இப்போது வாசிக்கும்போது கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சுப்பிரமணி இரமேஷ். கவிஞர் சல்மா முஸ்லிம் சமூகத்தின் துரோகியாக, காட்டிக்கொடுப்பவராக ஏன் பார்க்கப்படுகிறார்? – ‘கவிதைக்குக் கவிதையாலேயே பதிலளியுங்கள்’ கட்டுரையில் களந்தை பீர்முகம்மது ஆராய்கிறார். நேர்காணல்: “வாழ்க்கையை மேம்படுத்தும் கலை”- சஞ்சய் சுப்ரமணியன் கவிஞர் சுகுமாரன் நிகழ்த்திய விரிவான உரையாடல். சிறுகதை: விடைகொடு ஆப்பிரிக்கா (கோகே வா தியங்கோ) தமிழில்: ஜி.ஏ. கௌதம் மரண ருசி (கவிப்பித்தன்) கவிதைகள்: எம். யுவன் அஞ்சலி: கோகே வா தியங்கோ (எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி)