List Price
$10.00

காலச்சுவடு இதழ் 308 (2025 ஆகஸ்ட்) தலையங்கம்: நெருக்கடிநிலை ஐம்பது ஆண்டுகளின் விளைவுகளையும் நெருக்கடிநிலையை அறிவிக்காமலே அக்காலத்தின் ஆட்சியைத் தந்துவரும் மோடி அரசின் ஆட்சியையும் மதிப்பாய்வு செய்கிறது தலையங்கம். சிறப்புப் பகுதி: நெருக்கடிக் காலத்தின் துயர்களையும் போராட்டங்களையும் அனுபவங்களையும் எதிர்வினைகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள் சிபிஐ(எம்)மின் மத்தியக் குழு உறுப்பினர் அ. சவுந்தரராஜன், மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் ராகவ ராஜ், எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகியோர். ஆத்மாநாமின் நெருக்கடிக்காலக் கவிதையும் இப்பகுதியில் இடம்பெறுகிறது. 80+ தொடர்: ஆய்வுப் புலத்தில் ஆ. சிவசுப்பிரமணியனின் பங்களிப்புகளை மதிப்பிடுகிறார் இரா. காமராசு. நேர்காணல்: ’மனிதநேயத்திற்கான அறிவுத்துறையே மானிடவியல்’ – மானிடவியல் துறையின் நீள அகலங்கள் குறித்து பக்தவத்சல பாரதியிடம் உரையாடுகிறார் மருதன். திரை: பிரேசிலிய இயக்குநர் வால்டர் செலஸின் புதிய திரைப்படம் ’I'm Still Here’இன் பின்னணி குறித்து விவாதிக்கிறார் ரதன். கதைகள் தீராக்கனல் – எம். கோபாலகிருஷ்ணன் நினைவுச் சிலை – மு. குலசேகரன் மாயச் சுண்ண வரைகோல் – கோபோ அபெ தமிழில்: எழில் சின்னத்தம்பி கவிதைகள் க. மோகனரங்கன் பத்தி, மதிப்புரைகள், பதிவு, கடிதங்கள் ஆகியவையும் இவ்விதழில். https://kalachuvadu.com/magazines