List Price
$10.00

காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025) தலையங்கம்: அயலாரையும் அரவணைக்கும் அரசியல் புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமையை ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்முறையாகக் கருத வேண்டிய அவசியம் குறித்துத் தலையங்கம் பேசுகிறது. கண்ணோட்டம்: கறைபடிந்த விருதுகள் – செந்தூரன் 71ஆவது தேசிய விருதுகளில் உள்ள அழகியல், அரசியல் பிரச்சினைகளை அலசும் கண்ணோட்டம். சிறப்புப் பகுதி: 5 நாவல்கள், 5 பார்வைகள் கடந்த ஆண்டு வெளியான ஐந்து நாவல்களைப் பற்றிய விரிவான அலசல்கள். • மானசீகன் எழுதிய ‘மூன்றாம் பிறை’ பற்றி விக்னேஷ் ஹரிஹரன் • மு. குலசேகரன் எழுதிய ‘தங்க நகைப் பாதை’ பற்றி க.வை. பழனிசாமி • வேல்முருகன் இளங்கோ எழுதிய ‘இரவாடிய திருமேனி’ பற்றி சுனில் கிருஷ்ணன் • ஸர்மிளா ஸெய்யித் எழுதிய ‘சிவப்புச் சட்டை சிறுமி’ பற்றி ஜா. தீபா • குணா கந்தசாமியின் ‘டாங்கோ’ பற்றி சிவபிரசாத் கட்டுரைகள்: டிரம்ப் ராஜ்ஜியத்தில் பாரதமாக இருப்பது - மு. இராமனாதன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு விதித்துள்ள 50 சதவீதம் இறக்குமதித் தீர்வையின் சாதகபாதகங்களையும் அரசியலையும் மு. இராமனாதன் விரிவாக ஆராய்கிறார். சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர் - ஸ்டாலின் ராஜாங்கம் சிவகங்கை கண்டதேவி தேரோட்டம் குறித்து மதுரை உயர்நீதிமனறக் கிளை எழுப்பிய கேள்வியை முன்வைத்து, இன்றைய தமிழகத்தில் நிலவும் சாதியப் போக்குகளைப் புதிய கோணங்களில் விவாதிக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஆணவக் கொலைகளின் உண்மை விலை - ஏ.பி. இராஜசேகரன் சாதி ஆணவக் கொலைகள் உயிரை எடுப்பதற்காக மட்டுமல்ல; ஒரு சமூகம் முழுவதற்கும் பொருளாதார இழப்பினை ஏற்படுத்தவும் நிகழ்த்தப்படுகின்றன என்கிறார் ஏ.பி. இராஜசேகரன். பதிவுகள்: • சுகுமாரன் படைப்புப் பயணம் பற்றிய ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் • சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ.இரா. வேங்கடாசலபதிக்கான பாராட்டு விழா • பெங்களூரில் நடந்த புக் பிரம்மா இலக்கிய விழா அஞ்சலி: வே. வசந்திதேவி - ச. தமிழ்ச்செல்வன் பாரதியியல்: பாரதியின் முகவுரை பெற்ற இரு பாரத புத்திரிகள் - ய. மணிகண்டன் சிறுகதை: சந்தைக்கடை - பெருமாள்முருகன் கவிதைகள்: ஜெபா, சோ. விஜயகுமார், மண்குதிரை