List Price
$10.00

தலையங்கம்: அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம் மேற்கு வங்காள உருது அகாடமி நடத்தவிருந்த ‘இந்தி சினிமாவில் உருது’ கருத்தரங்கம் “தவிர்க்க முடியாத” காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் மதவாத அரசியல் குறித்துத் தலையங்கம் ஆராய்கிறது. பிணை மறுப்பு: நீதியின் வன்முறை குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரித்திருக்கும் சூழலில் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள்மீது தொடரும் நடவடிக்கைகளைப் பற்றித் தலையங்கம் பேசுகிறது. கட்டுரைகள்: தெரு நாய்களும் கடல் ஆமைகளும் - மு. இராமநாதன் இந்தியக் கடற்கரைகளில் கடல் ஆமைகளின் இனவிருத்திக்குத் தெரு நாய்களால் உருவாகும் ஆபத்துகளை மு.இராமநாதன் குறிப்பிடுகிறார். விலங்குப் பண்ணை: 80 ஆண்டுகள். விலங்குகள் சொல்லும் அரசியல் பாடம் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா விலங்குப் பண்ணை நாவல் வெளியான 80 ஆண்டுகளுக்குப் பிறகு சச்சிதானந்தன் சுகிர்தராஜா தனக்கேயுரிய பார்வையுடன் இந்த நாவலை அலசி ஆராய்கிறார். சிறப்புப் பகுதி: சு.ரா. நினைவு இருபதாம் ஆண்டு • வான்கோ: ஒப்பற்ற கலைஞனின் உண்மையான வாழ்க்கை -அறிமுகமும் மொழிபெயர்ப்பும்: சுந்தர ராமசாமி. • ‘அன்புள்ள வசந்தகுமார்’- சு.ரா. கடிதங்கள் • கட்டுரை: சூத்திரங்கள் மாறலாம் விழுமியங்கள் மாறாது - ப. சகதேவன் நாவல் சிறப்புப் பகுதி: என். ஸ்ரீராமின் இரவோடி நாவல்பற்றி சுப்பிரமணி இரமேஷ் பாரதியியல்: முத்துலெட்சுமியை எழுதச்சொன்ன பாரதி - ய. மணிகண்டன். திரை: மௌனத்தின் மறுபக்கம் - தூயன் அஞ்சலி: • பி.வி. கரியமால் - ஸ்டாலின் ராஜாங்கம் • ஆர்.எஸ். நாராயணன் - தி.அ. ஸ்ரீனிவாஸன். மதிப்புரைகள்: • தற்புகழ்ச்சியற்ற எழுத்து - களந்தை பீர்முகம்மது • உயிரின் வாதை - நாகரத்தினம் கிருஷ்ணா. பதிவுகள்: • அமெரிக்கன் கல்லூரியில் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல் வெளியிட்டு விழா. • சங்கீத கலாநிதி விருது பெற்ற டி.எம். கிருஷ்ணாவுக்கும், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஆ. இரா. வேங்கடாசலபதிக்கும் நாமக்கலில் நடந்த பாராட்டு விழா. • மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியும் சாகித்திய அகாதெமியும் இணைந்து நடத்திய ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு விழா. சிறுகதை: • நனவிலி பிம்பங்கள் - ச. மோகனப்ரியா • நீலகேசி - கலைச்செல்வி கவிதைகள்: பெருமாள்முருகன் https://kalachuvadu.com/magazines