List Price
$10.00

தலையங்கம்: எல்லோர் கைகளிலும் கறை கரூர் துயரச் சம்பவம் குறித்த தலையங்கம் மக்களின் விழிப்புணர்வு, அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வு, காவல்துறையினரின் கடமைகள் ஆகியவை குறித்துப் பேசுகிறது. இப்பிரச்சினையில் வெளிப்படும் தமிழ் அறிவுலகத்தினரின் அபாயகரமான போக்குகளையும் கவனப்படுத்துகிறது. கட்டுரைகள்: பிரிவினைவாதப் பயங்கரம் — கா.அ. மணிக்குமார்: இந்தியப் பிரிவினை எப்படி, ஏன் ஏற்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்பவை குறித்த இக்கட்டுரை, பிரிவினை என்னும் கருத்தியலை ஆழமாக அலசுகிறது. தன்னாட்சியே சுதந்திரம் — விவேக் ராதாகிருஷ்ணன்: மேற்கத்தியத் தத்துவவியல் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர் இம்மானுவேல் காண்ட். அவர் மனித அறத்தை அணுகிய விதத்தையும் அவருக்கிருந்த சாவல்களையும் தத்துவார்த்தமான நெருக்கடிகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது. ஜோடி டி குருஸ் நேர்காணல்: சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோடி டி குருஸின் விரிவான நேர்காணல். சந்திப்பு: அரவிந்தன். திரை: ‘பைசன்’- வன்முறையின் விளையாட்டு — ஸ்டாலின் ராஜாங்கம். உரைகள்: சேரன் 50: — துஷி ஞானப்பிரகாசம் தீரமிகு புது உலகம் — கோ. ஒளிவண்ணன். பதிவு: இயல் விருது 2024 - கிருஷ்ண செல்வன் பாரதியியல்: யார் இந்த சரஸ்வதியார்? — ய. மணிகண்டன் சிறுகதைகள்: களந்தை பீர்முகம்மது, உமா வரதராஜன் அஞ்சலி: எஸ்.எல். பைரப்பா - பாவண்ணன் ஜேன் குடால் – செல்வகுமாரன் ரமேஷ் பிரேதன் - சித்ரன்