• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 312 (2025 டிசம்பர் )

காலச்சுவடு இதழ் 312 (2025 டிசம்பர் )

Kalachuvadu Publications
  • Price

    $10.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    4 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    80 Pages

About This Book

தலையங்கம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒவ்வொரு மாநிலத்திற்கான மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும் நடைமுறை 2027இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு நடக்கவிருக்கிறது. இது தென் மாநிலங்களின் அரசியல் வலிமையைப் பெரிதும் குறைத்துவிடக்கூடும் என்கிற அச்சம் நிலவுகிறது. இந்தப் பிரச்சினையின் பரிமாணங்களை அலசும் தலையங்கம் சாத்தியமான தீர்வுகளையும் முன்வைக்கிறது. மௌனத்தின் அபாயம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு நடந்து 35 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த இனச்சுத்திகரிப்பு குறித்துத் தமிழகத்தில் நிலவிவரும் மௌனம் பற்றிப் பேசுகிறது துணைத்தலையங்கம். கட்டுரைகள்: ஆர்எஸ்எஸ்ஸும் காரல் மார்க்ஸும் — ஜே.ஆர்.வி. எட்வர்ட் 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மூன்று முறை இந்திய அரசால் தடைவிதிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் புதிய கண்ணோட்டத்தோடு விவாதிக்கும் கட்டுரை. இலங்கையரா? இந்தியரா? — ந. சரவணன் தமிழகத்தில் முகாம்களில் வாழும் இந்தியத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்த கட்டுரை. இதுவா ஊடக அறம்? —கீதா நாராயணன் சினிமா நடிகை கெளரி கிஷனிடம் ஊடகவியலாளர் தகாத கேள்வியை எழுப்பியது தொடர்பான சர்ச்சையைப் பற்றிய கட்டுரை. பிறழ் தகவல்களின் காலம் — தோ. டால்டன் சமூக வலைதளங்களில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் பரப்பப்பட்டுவரும் செய்திகளின் பின்னணியையும் கரூர் துயரச் சம்பவம், சிவகங்கை அஜித்குமார் படுகொலை, சென்னை பருவமழைக் காலங்களில் பொய்யாகப் பரப்பபட்டுவந்த செய்திகளின் அரசியலையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது இக்கட்டுரை. சுந்தர ராமசாமி (எனக்கு) எழுதிய இரண்டு கடிதங்கள்—சுகுமாரன் எழுத்தாளர் சுகுமாரனுக்கு சு.ரா. எழுதிய கடிதங்கள் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவங்களின் பதிவு. டிரம்பின் கறுப்பின அடையாள நீக்கம் — ஞா. குருசாமி அமெரிக்கா, கறுப்பின வரலாறு தொடர்பான அடையாளச் சின்னங்களை நீக்குவது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவிற்குப் பிறகு உண்மையான வரலாற்றின் அடையாளத்தை விசாரணைக்குட்படுத்தும் கட்டுரை. சிறுகதைகள்: தீவிளி — சவீதா கருநாகங்கள் — பானு முஷ்தாக் (தமிழில்: ப. சகதேவன்) கவிதைகள்: கனகா பாலன், ச. அர்ஜுன்ராச், பெரு விஷ்ணுகுமார், தேன்மொழி அசோக். பதிவு: காலச்சுவடு-30, சேரன்-50. மதிப்புரைகள்: பாதுகாப்பின்மையின் பதற்றம் — மண்குதிரை தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் திறவுகோல் — அ. மோகனா நீர்ப்பரணி நாவல் - களந்தை பீர்முகம்மது.

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 312 (2025 டிசம்பர் )
Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 312 (2025 டிசம்பர் )
Kalachuvadu Publications
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website