Price
$14.00

தலையங்கம்: குழந்தைகள் மீதான டிஜிட்டல் பாலியல் அத்துமீறல்களைக் குறைபாடுகளின் பெயரால் நியாயப்படுத்துவதைத் தலையங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ‘செக்ஸ் குரூமிங்’ அபாயங்கள், போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது தலையங்கம். சிறப்புப் பகுதி: கல்வியில் சிறக்கிறதா தமிழ்நாடு? தமிழகத்தின் கல்வி நிலை, குறிப்பாக பள்ளிக்கல்வியின் நிலையையும் அதை மேம்படுத்தும் வழிகளையும் பல்வேறு கோணங்களில் துரை சார்ந்த நிபுணர்களும் சிந்தனையாளர்களும் அலசுகிறார்கள். பிற நாடுகளுடனான ஒப்பீடுகளும் இடம்பெறுகின்றன. கட்டுரைகள்: இஸ்லாத்தில் சாதி - களந்தை பீர்முகம்மது தென்மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில் சாதிய பேதமில்லாமல் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் காதல் உணர்வுகள் மதிக்கப்படுவது குறித்தும் எழுதப்பட்ட அனுபவக் கட்டுரை. சாதியச் சொல்லாடல்களின் சமகால மாற்றங்கள் - ஸ்டாலின் ராஜாங்கம் தமிழகத்தில் சாதிய அமைப்புகளும் சாதியப் பெருமிதங்களும் பெருகிவரும் சூழலில் எல்லாச் சாதிகளையும் திருப்பதிப்படுத்தும் இணக்க அரசியலை எவ்வாறு அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன என்பதை அலசுகிறது கட்டுரை. கேரளம்: தன்வயப்படும் மதங்களும் அரசியலும் - எச். பீர் முஹம்மது கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலிலும் இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த பதிவு. அம்மாக்களும் மகள்களும் - சச்சிதானந்தன் சுகிர்தராஜா இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய், சீன எழுத்தாளர் யுங் சாங் இருவருடைய தன்வரலாற்று நூல்கள் குறித்த கட்டுரை. மதிப்புரை: ஷகி பெய்ன் (நாவல்) - ஷாலினி பிரியதர்ஷினி பதிவு: கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை கவிக்கோ மன்றத்தில் சங்கீத காலநிதி சஞ்சய் சுப்ரமணியனின் இசைபட வாழ்தல், தி. ஜானகிராமனின் இசைசார் சிறுகதைகள் அடங்கிய ரசிகரும் ரசிகையும் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி. உரை: ஓஸ்லோவில் 19.10.2025 அன்று காலச்சுவடு 30—சேரன் 50 நிகழ்வில் கண்ணன் ஆற்றிய உரை. பாரதியியல்: பாரதியும் சுதேசி கிருஷ்ணனும் (அருண் பிரகாஷ்) சிறுகதைகள்: குறளி - யுவன் சந்திரசேகர் தொலைகின்ற இடம் – கோகுலக்கண்ணன் மழை நிற்கப் போவதில்லை - பெருந்தேவி கதைகள் - தூயன் கவிதைகள்: சுகுமாரன் அ. ஈஸ்டர் ராஜ்