• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
பெண்கள் நடுவே

பெண்கள் நடுவே

Kalachuvadu Publications
  • Price

    $16.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    18 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    272 Pages

About This Book

குடும்பத்தை மையப்படுத்திய இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த அயர்லாந்துச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. கண்டிப்பும் சிடுசிடுப்பும் கொண்ட மைக்கேல் மோரன் அயர்லாந்தின் குடும்பங்களில் அப்போது இயல்பாக நிலவிய ஆணாதிக்கப் போக்கின்படியே செயலாற்றுகிறார். அவரது பார்வைகளும் முடிவுகளும் வீட்டிலிருக்கும் பெண்களைப் பாதிக்கின்றன. கால மாற்றத்தில் அயர்லாந்துச் சமூகத்தில் ஆணாதிக்கத்தின் பிடி தளர்கிறது. இந்த மாற்றத்தின் தாக்கம் மோரனின் குடும்பத்திலும் பிரதிபலிக்கிறது. ‘பெண்கள் நடுவே’ இந்த மாற்றத்தை மிக அழகாக விவரிக்கிறது. அயர்லாந்துச் சமூகத்தில் ஒரு காலப்பகுதியின் சுருக்கமான, சுவை குன்றாத சித்திரமாக அமைந்திருக்கும் இந்த நாவலை நேர்த்தியும் எளிமையும் கூடிய மொழியில் தந்திருக்கிறார் அசதா.

About The Author

1934இல் டப்ளினில் பிறந்தார். முழுநேர எழுத்தாளராவதற்கு முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். கற்பித்தல் பணியுடன் நீண்ட பயணங்களையும் மேற்கொண்டார். மைக்கேல் லாங்லி, ஷீமஸ் ஹீனி போன்ற புகழ்பெற்ற அயர்லாந்து எழுத்தாளர்களது தலைமுறையைச் சார்ந்தவர்; அவர்களுக்கு இணையான எழுத்தாற்றல் பெற்றவர். மிகவும் பாராட்டப்பட்ட ஆறு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆண்டுதோறும் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரது சிறந்த புனைவு நூலுக்கு மெக்காஹர்ன் பெயரில் விருது வழங்கப்படுகிறது. ‘பெண்கள் நடுவே’ நாவல் ‘ஐரிஷ் டைம்ஸ்’ விருதை வென்றது. புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றது. இந்த நாவலை நான்கு பாகங்கள் கொண்ட தொலைக்காட்சித் தொடராக பிபிசி தயாரித்திருக்கிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
பெண்கள் நடுவே
ஜான் மெக்காஹர்ன்
பெண்கள் நடுவே
ஜான் மெக்காஹர்ன்
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website