• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்)

பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்)

Kalachuvadu Publications
  • Price

    $14.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    18 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    224 Pages

About This Book

-எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகளும் உரையாடல்களும் நிகழ்ந்தன. எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளரின் உரைகள் கட்டுரை வடிவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்களில் பெரும்பாலோர் இளம் தலைமுறையினர். அவர்களின் வேறுபட்ட பார்வையை முன்வைக்கும் தீர்க்கமான கட்டுரைகள் இடம்பெறுவது இந்நூலின் தனித்துவம். பேராசிரியர்கள் க. காசிமாரியப்பனும் அ. செல்வராசுவும் தொகுத்துள்ள இந்த நூல் சமகாலப் படைப்பாளி ஒருவரின் பன்முகச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக அறியவும் மதிப்பிடவும் பெரிதும் துணைசெய்யும்.

About The Author

பெருமாள்முருகன் (பி. 1966) படைப்புத்துறைகளில் இயங்கிவருபவர். அகராதியியல், பதிப்பு ஆகிய கல்விப்புலத் துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். அரசு கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்)
பெருமாள்முருகன்
பேசத் துணிந்த எழுத்துக்கள் (பெருமாள்முருகன் படைப்புலகம்)
பெருமாள்முருகன்
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website