• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
மணிகர்ணிகா

மணிகர்ணிகா

Kalachuvadu Publications
  • Price

    $8.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    18 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    96 Pages

About This Book

-தேவேந்திர பூபதியின் கவிதைகள் உடனடிச் சமன்பாடுகளின் வழி வாழ்வுபற்றிய அவதானங்களை முன்வைப்பவை. தேர்ந்த சொற்களால் உருவக மொழியில் எழுதப்பட்டவை. நவீன கவிதை தனக்கென்று உருவாக்கிவைத்திருக்கும் மொழியில் பேசுபவை. இடையிடையே மரபின் தொனியிலும் ஒலிப்பவை. கருத்துகளைக் காட்சிகளாக உருமாற்றித் தரும் முனைப்பு அதிகரிக்கையில், கவிதானுபவத்தில் செறிவும் செழுமையும் கூடுகின்றன. கவிதைக்குள் தானாகச் சொற்சிக்கனம் சேருகிறது. இவை நிகழும்போது சிறந்த கவிதைகள் உருவாகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் அதற்கான சான்றுகள். யுவன் சந்திரசேகர்

About The Author

பா. தேவேந்திர பூபதி (பி. 1969) வணிகவியலில் இளம்முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்ற பா. தேவேந்திர பூபதி, பழனியைச் சொந்த ஊராகக் கொண்டவர். ஓய்வுபெற்ற பஞ்சாயத்து ஒன்றிய ஆணையரான அ. பாஸ்கர சேதுபதிக்கும் தங்கத்துக்கும் முதலாவதாகப் பிறந்தவர். சங்க இலக்கியங்களையும் தத்துவங்களையும் ஆர்வமாகப் பயின்று அதன்வழியே நவீன கவிதைத் தளத்திற்குள் வந்திருக்கும் இவர், ‘கடவு’ இலக்கிய அமைப்பினை நிறுவிச் செயல்பட்டு வருகிறார். சிற்றிதழ்களில் பரவலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது ஏழாவது தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகள்: ‘பெயற்சொல்’, ‘வெளிச்சத்தின் வாசனை’, ‘அந்தர மீன்’, ‘முடிவற்ற நண்பகல்’, ‘ஆகவே நானும்’, ‘நடுக்கடல் மௌனம்’. மனைவி: கீதா, மகன்: விஜயேந்திர பூபதி மின்னஞ்சல்: devendhirapoopathy@gmail.com

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
மணிகர்ணிகா
பா. தேவேந்திர பூபதி
மணிகர்ணிகா
பா. தேவேந்திர பூபதி
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website