• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
ஆனந்தாயி

ஆனந்தாயி

Kalachuvadu Publications
  • Price

    $17.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    19 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    296 Pages

About This Book

ப. சிவகாமி எழுதியுள்ள ‘ஆனந்தாயி’ நாவலைத் தலித் படைப்பாக மட்டுமே வாசிக்க வேண்டிய அவசியமில்லை. நாவலில் சாதி பற்றிய குறிப்புகளோ அதுசார்ந்த ஒடுக்குமுறைகள் பற்றிய குறிப்புகளோ இல்லை. படைப்பாளியின் சாதி அடையாளம் தெரிந்த பின்னால் நாவலுக்குத் தரப்பட்ட அடையாளமாகவே தலித் நாவல் என்ற அடையாளம் இருக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வே இந்நாவலின் மையம். இந்தியக் கிராமங்களில் நிலவும் சமூக அமைப்பு, குடும்ப அமைப்பு ஆகியவற்றூடாக இயங்கும் பெண்களின் அக, புறவுலகை இந்நாவல் சிறப்பாக எடுத்துவைத்திருக்கிறது. நாவலில் புலப்படும் வாழ்வு கிராமப்புற அடித்தட்டுப் பெண்கள் எவருக்கும் தொடர்புடையதுதான் என்றாலும் இந்த வாழ்வு தலித் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது என்பதில் இது முக்கியமான படைப்பாக மாறியிருக்கிறது. இந்திய வாழ்க்கையைப் பெண்பார்வையிலிருந்து அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆவணம் இந்நாவல். -ஸ்டாலின் ராஜாங்கம்

About The Author

எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி. இந்திய ஆட்சிப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆறு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பழையன கழிதலும், ஆனந்தாயி, குறுக்கு வெட்டு ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதமிக்காகத் ‘தலித் சிறுகதைத் தொகுப்பு’ என்னும் நூலைத் தொகுத்துள்ளார். 1995முதல் இலக்கிய இதழான புதிய கோடாங்கியில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். ஓவியர் சந்ரு எழுதிய சிறுகதையொன்றை ‘ஊடாக’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கினார். இப்படத்திற்கு இசை இளையராஜா. இது 1995இல் குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றது. நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் வேர்ச்சொல் இலக்கிய விருதை 2025ஆம் ஆண்டு பெற்றார். மின்னஞ்சல்: psivakami@gmail.com

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
ஆனந்தாயி
சிவகாமி
ஆனந்தாயி
சிவகாமி
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website