• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்

By நூலாசிரியர்: சஞ்சய் சுப்ரமணியன் | கிருபா ஜி |

இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்
Price$13.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.

About This Book

-எனது இசையுடன் நான் கொண்டுள்ள உறவு மிகவும் அந்தரங்க மானது. நான் பாடும் பாடல்களின் உட்பொருள் அனைத்தும் இந்து சமய மரபைச் சேர்ந்தவை என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. என்னுடைய அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவற்றோடு நான் உறவு கொள்கிறேன். ஒவ்வொரு பாட்டுக்கும், அது தியாகராஜருடையதாக இருந்தாலும் தீட்சிதருடையதாக இருந்தாலும், எனது வாழ்க்கையில் அதற்கான முக்கியத்துவம் உண்டு. இவற்றைப் பொதுவெளியில் பாடும்போது அவற்றைப் பாடுகிறேன் என்பதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் எனக்கில்லை. கேட்பவர்களிடம் அவை உணர்வலைகளை ஏற்படுத்தலாம்; ஏற்படுத்தாமலும் போகலாம். ஆனால் நான் பாடுவதன் மூலமாகவே சமயம் சார்ந்தோ, ஆன்மிகம் சார்ந்தோ குருபீடத்தில் அமர்ந்து கொள்வதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் சமயம் என்பது மிகுதியும் சமூக-அரசியல் அனுபவம் மட்டுமே. அதன் விளிம்புகளில் நின்றுகொண்டிருப்பதாகவே என்னால் உணர முடிகிறது. சமுதாயத்தோடு எனக்குள்ள முதன்மையான தொடர்பு எனது இசையின் மூலமாகத்தான்.

Details
Author
நூலாசிரியர்: சஞ்சய் சுப்ரமணியன் | கிருபா ஜி |
Publisher
Kalachuvadu Publications
Release date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
208 Pages
About The Author

கர்னாடக இசையின் புதிய தலைமுறைக் கலைஞர்களில் முதன்மையான இடம் வகிப்பவர்களில் ஒருவர். வயலின் கலைஞராகப் பயின்று வாய்ப்பாட்டுக் கலைஞராகப் புகழ்பெற்றிருப்பவர். மரபிசையை நவீனப்படுத்திப் பெருவாரி மக்களின் ரசனைக்குரியதாக்கியவர். செவ்வியல் பாடகராக மட்டுமில்லாமல் இசையின் பிற வடிவங்களிலும் பரிசோதனை செய்திருப்பவர். இசை உருப்படிகளை எழுதியிருக்கிறார். மெட்டுகளை உருவாக்கியிருக்கிறார். தேர்ந்த வாசகர். எழுத்தாளர். மும்பை சண்முகானந்த சபையின் தேசிய மதிப்புறு விருதை 2014இலும் கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதை 2015இலும் பெற்றார். சென்னை, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் கலாசிகாமணி விருதுகளையும் பெற்றார். இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் உலக நாடுகளிலும் தொடர்ந்து கச்சேரிகளை நிகழ்த்திவருகிறார். திரைப்படங்களுக்கும் தனியிசைத் தொகுப்புகளுக்கும் பாடுகிறார். சென்னையில் வசிக்கிறார்.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website