• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

ஜீவ வாக்கு : பாரதி மொழிபெயர்த்த ஜகதீச சந்திர போஸ் உரை

By ய. மணிகண்டன்

ஜீவ வாக்கு : பாரதி மொழிபெயர்த்த ஜகதீச சந்திர போஸ் உரை
Price$8.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

-உலக இலக்கியங்களைச் சிறுசிறு மொழிபெயர்ப்பு களாலும் கட்டுரைகளாலும் அறிமுகப்படுத்திய பாரதி, வங்காளத்தின் இலக்கிய, அரசியல் முன்னோடிகளின் கவிதை, கதை, கட்டுரை, உரைகளை மிகுதியாகத் தமிழாக்கியுள்ளார். பங்கிம் சந்திரரின் பாடல், அரவிந்தரின் கவிதை, தாகூரின் எழுத்துகள் எனப் பலவற்றையும் மொழிபெயர்த்த பாரதி, அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திர போஸின் வரலாற்றுப் பெருமை கொண்ட சொற்பொழிவு ஒன்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தத் தமிழாக்கம் ‘ஜீவ வாக்கு’ என்னும் பெயரில் 1918இல் சிறுநூலாக வெளிவந்தது. இந்நூல் இப்பொழுது ‘சுதேசமித்திரன்’, ‘மாடர்ன் ரிவ்யூ’ முதலிய நூற்றாண்டுப் பழைமைவாய்ந்த இதழ்களிலிருந்து தேடிக் கண்டறிந்த அரிய ஆதாரங்களால், மூல வடிவங்களால் நம்பகமான ஆராய்ச்சிப் பதிப்பாக உருப்பெற்றுள்ளது. இந்நூலை ஆய்வும் பதிப்புமாக உருவாக்கியுள்ளார் நம் காலத்தின் பாரதி அறிஞர் ய. மணிகண்டன்.

Details
Author
ய. மணிகண்டன்
Publisher
Kalachuvadu Publications
Published date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
96 Pages
About The Author

ய. மணிகண்டன் (பி. 1965) தமிழ் யாப்பியல், சுவடிப்பதிப்பியல், பாரதியியல், பாரதிதாசனியல் ஆகிய களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நிகழ்த்தியுள்ள முனைவர் ய. மணிகண்டன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் பத்தாண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியாற்றி வருபவர். ‘தமிழில் யாப்பிலக்கணம்: வரலாறும் வளர்ச்சியும்’, ‘நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்’, ‘பாரதிதாசன் யாப்பியல்’, ‘பாரதிதாசனின் அரிய படைப்புகள்’, ‘பாரதிதாசன் இலக்கியம்: அறியப்படாத படைப்புகள்’, ‘மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்’, ‘ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள்’, ‘பாரதியியல்: கவனம்பெறாத உண்மைகள்’, ‘மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்’, ‘மணிக்கொடி கவிதைகள்’ உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கியவர்.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website