Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.
About This Book
எல்லாப் பயணங்களும் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. பயணம் தரும் அனுபவம் ஒருபுறம் இருக்க, பயணமே ஓர் அலாதியான அனுபவம்தான். எழுத்தாளர் சஞ்சயன் புதிய அனுபவங்களைப் பெறுவதற்காகவே பயணம் - அதுவும் நடைபயணம் - மேற்கொண்டார். 3200 கிலோமீட்டர்களுக்கும் மேல் நீண்ட நடைபயணங்களின்போது தான் கேட்ட கதைகளை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். வலி, வேதனை, கருணை, அன்பு எனப் பல உணர்வுகளை உள்ளடக்கிய கதைகள் இவை. இந்தப் பயணங்கள் தன்னைத் தனக்கே புரியவைத்திருக்கின்றன என்கிறார் சஞ்சயன். அவரது பயணத்தில் கிடைத்த இந்த அனுபவக் கதைகள் வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைத் தரிசனங்களையும் தரக்கூடியவை.
Details
Author
சஞ்சயன் செல்வமாணிக்கம்
Publisher
Kalachuvadu Publications
Release date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
96 Pages
About The Author
இலங்கையில் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் தற்போது நோர்வே, ஒஸ்லோவில் வசித்துவருகிறார். தனது அல்புனைவுகளால் பெரிதும் அறியப்பட்ட இவரது எழுத்துகள் ‘படுவான்கரை - போராளிகளின் வாழ்வும் துயரமும்’ (2013), ‘நினைவு மறந்த கதை’ (2013), ‘தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு’ (2023), ‘தேவதைகளின் பாதணிகள்’ (2024) என்ற தலைப்புகளில் இதுவரை நூலுருப் பெற்றுள்ளன. புகைப்படக் கலையிலும் நீண்ட நடைப்பயணங்களிலும் ஈடுபாடு கொண்ட சஞ்சயன் கணினித் துறையில் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல்: adsayaa@gmail.com