• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

காபூல்மீது செவ்வானம்

By பர்யாலாய் போப்பல்சாய் | கெவின் மெக்லீன் |

காபூல்மீது செவ்வானம்
Price$18.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.

About This Book

-1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா. அங்கு அது ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்களின் விளைவாகப் போர்த் தரகர்கள் எழுச்சி பெற்றார்கள். தீவிரவாதம் செழித்தது. கொலை, கொள்ளை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகின. கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தனிமனித உரிமைகளும் முடங்கின. இந்தப் பிரச்சினைகளால் பந்தாடப்பட்ட ஒருவன் எவ்வாறு ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பித்து, வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, இறுதியாக அமெரிக்காவில் குடிபுகுந்து, அங்கே தன்னுடைய வாழ்வையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டமைக்கிறான் என்பதைச் சாகச நாவல்களுக்கே உரிய தன்மையுடன் சொல்கிறது இந்நூல். ஒரே சமயத்தில் அனுபவப் பதிவாகவும் பயண இலக்கியமாகவும் திகழும் இப்படைப்பு ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் பற்றியும் தீவிரவாதத்தின் பரிணாமத்தைப் பற்றியுமான நமது அறிதலை விரி வுபடுத்தக்கூடியது.

Details
Author
பர்யாலாய் போப்பல்சாய் | கெவின் மெக்லீன் |
Publisher
Kalachuvadu Publications
Release date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
328 Pages
About The Author

பர்யாலாய் போப்பல்சாய்-ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் பிறந்தார். காபூல் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் அரசியல் பட்டம் பெற்றவர். 1980இல் ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஊடுருவல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் சான் டீகோ நகரில் குடியேறினார். இருபது ஆண்டுகள் கழித்து 2002இல் தாலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு காபூலுக்குத் திரும்பினார். அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வந்துசெல்கிறார். கெவின் மெக்லீன்-அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் பட்டம் பெற்று, பாஸ்டன், சான் டீகோ ஆகிய நகரங்களில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவரது முதல் புத்தகமான ‘கிராஸிங் தி ரிவர் காபூல்’ 2017இல் போடோமேக் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website