• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

குறுமக்கள் கொட்டாரம்

By ஜான் சுந்தர்

குறுமக்கள் கொட்டாரம்
Price$9.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

-குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும். குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதன் வழியாக நாமும் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளின் முன்னால் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்கும் கணங்களில் நிகழும் மாயம் இது. அந்த மாயக் கணங்களை இந்நூல் தரிசிக்க உதவும். அவிலா டீச்சர் என்னும் மழலையர் பள்ளி ஆசிரியையின் அனுபவங்களைப் பதிவுசெய்யும் இந்த எழுத்து, கற்றுக் கொடுத்தல் என்பது பாடம் எடுப்பது மட்டுமல்ல என்பதைச் சொல்கிறது. அவிலா டீச்சருக்கும் அவரிடம் பயிலும் குழந்தைகளுக்கும் இடையில் நிகழும் அதிசயக் கணங்களை, மழலைகளின் உரையாடலைக் கதைபோலச் சொல்லியிருக்கிறார் அவிலா டீச்சரின் கணவரும் மெல்லிசைக் கலைஞருமான எழுத்தாளர் ஜான் சுந்தர்.

Details
Author
ஜான் சுந்தர்
Publisher
Kalachuvadu Publications
Published date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
112 Pages
About The Author

ஜான் சுந்தர் (பி. 1973) இசைக் கலைஞர், கவிஞர். கோவையில் ‘இளையநிலா’ என்னும் மெல்லிசைக் குழுவையும் ‘பாட்டுப் பட்டறை’ என்னும் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார். தனியார், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான இசைப் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்கிறார். ‘சொந்த ரயில்காரி’ இவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: ilayanilajohnsundar@gmail.com அலைபேசி: 98422 13012

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website