• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

குவளைக்கண்ணன் கவிதைகள்- முழுத்தொகுப்பு

By குவளைக்கண்ணன்

குவளைக்கண்ணன் கவிதைகள்- முழுத்தொகுப்பு
Price$12.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்டு விதமான எளிமை உண்டு. ஒன்று குழந்தை மனத்தின் எளிமை. பிறகு அறிவு சேர்ந்து, எளிமை இழந்து தவித்து, அவஸ்தை கொண்டு அலைக்கழிந்து, பின் மனம் கடந்து மலரும் புதிய எளிமை. இரண்டும் ஒன்றல்ல. குழந்தையின் எளிமை தன்னிருப்பு அறியாதது. மனம் கடந்த எளிமை தன்னிருப்பின் ஊற்றுக்கண்ணில் தற்கணம் நிலைப்பது. இந்த இரண்டாவது எளிமையின் பார்வை அங்கங்கே வெளிச்சம் காட்டுவது குவளைக்கண்ணன் கவிதைகளின் சிறப்பு. -ஆனந்த்

Details
Author
குவளைக்கண்ணன்
Publisher
Kalachuvadu Publications
Published date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
184 Pages
About The Author

குவளைக் கண்ணன் (பி. 1964) இயற்பெயர் ரவிக்குமார். குவளைக் கண்ணன் எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறார். ‘மாயா பஜார்’ (1993), ‘பிள்ளை விளையாட்டு’ (2005) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். ‘ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’ (2006), ‘குற்ற முத்திரை’ (2007), ‘எங்கே அந்தப் பாடல்கள்?’ (2010) ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகள். ‘க’ (2010) நாவலை ஆனந்துடன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார். email: flora.ravi@yahoo.co.in

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website