• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

மரண ஜீவிதம்

By திருக்குமரன் கணேசன்

மரண ஜீவிதம்
Price$12.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.

About This Book

-‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ கட்டுரைத் தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்ட திருக்குமரன் கணேசனின் கதைகள் இவை. தஞ்சாவூர் வட்டாரக் கிராம மக்களின் வாழ்க்கையே இவருடைய கதைக்களம். அம்மக்களின் பேச்சுவழக்கிலிருந்து தனது மொழியை எடுத்துக்கொண்டிருக்கிறார். திருடர்கள், வைத்தியர்கள், தனது நூறாவது என்கவுண்டராகத் தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும் காவல்துறை அதிகாரி என வித்தியாசமான கதாபாத்திரங்களின் வழியாக மட்டுமல்லாமல் டைகர்-ரோஸி என்கிற நாய்களின் வழியாகவும் தஞ்சை மண்ணின் அன்பையும் அரவணைப்பையும் துயரத்தையும் சொல்கிறார் திருக்குமரன். திரைப்படக் காட்சிகளைப் போல அமைந்திருக்கும் இக்கதைகளின் சம்பவங்களும் உரையாடல்களும் சிறந்த காட்சி அனுபவத்தையும் தருகின்றன. ‘மனித மனங்களை நம்மால் அளவிடவே முடியாது. இந்தக் காலம் தரும் பெரும் துயரங்களையும்தான்’ என்று தனது கதைகளின் மூலம் சொல்லும் திருக்குமரன் கணேசனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

Details
Author
திருக்குமரன் கணேசன்
Publisher
Kalachuvadu Publications
Release date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
184 Pages
About The Author

திருக்குமரன் கணேசன் (பி.1984) தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருலோக்கி என்னும் சிற்றூரில் பிறந்தவர். சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்கம் (D.F.Tech., Direction) பயின்று திரைப் படைப்பாக்க முயற்சியில் இருப்பவர். தமிழில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டத்துடன் சமூகவியலிலும் முதுகலை பட்டம் பெற்றவர். தற்பொழுது, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘திரை மாற்றுத்திரைக் காட்சிப்படுத்தும் தமிழிரும் அடையாள அரசியலும்’ என்ற பொருண்மையில் முனைவர் பட்ட ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நிலவெறிக்கும் இரவுகளில்’ 2007இல் வெளிவந்திருக்கிறது. நூலாசிரியருடன் தொ

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website