• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!

By பானு முஷ்தாக்

ஒருமுறை பெண்ணாகி வா, கடவுளே!
Price$15.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற பானு முஷ்தாக் கதைகளின் தொகுப்பு இந்நூல். இதிலுள்ள பன்னிரண்டு கதைகளும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டவை. பானு முஷ்தாக்கின் கதையுலகம் இரு அச்சுக்களில் சுழல்கிறது. ஒரே சமயத்தில் மதத்தையும் பாலினத்தையும் சார்ந்தது. இஸ்லாமியப் பெண்கள், பெண்களாக இருப்பதனாலேயே அடையும் துயரங்களையும் மதக்கட்டுப்பாடுகள் மூலம் அனுபவிக்கும் இடர்களையும் தீராக் கோபத்துடனும் தீவிர நகைச்சுவையுடனும் இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாலியல், மத அடக்கு முறைகளுக்கு எதிராக எழுத்திலும் சமூகப் பணி வாயிலாகவும் செயலாற்றிவரும் பானு முஷ்தாக் கன்னட முற்போக்கு எழுத்தாளர்களில் முன்னணி ஆளுமையாகக் கருதப்படுகிறார்.

Details
Author
பானு முஷ்தாக்
Publisher
Kalachuvadu Publications
Published date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
248 Pages
About The Author

கன்னட எழுத்தாளரான பானு முஷ்தாக் முன்னோடி இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். வழக்குரைஞர். சமூகச் செயல்பாட்டாளர். கர்நாடக மாநிலம் ஹாசனில் பிறந்த பானு முஷ்தாக் முற்போக்குச் சிந்தனை உடைய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர். கன்னட மொழியின் மீது அவருக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. ஒரு வழக்குரைஞராகப் பெண்ணுரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் பல்லாண்டு காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார். இதனை விரும்பாத பழமைவாதிகள் 2000ஆவது ஆண்டு அவரையும் அவர் குடும்பத்தாரையும் சமூக விலக்கம் செய்துவைத்திருந்தார்கள். சமூகப் போராட்டங்களுக்காக இலக்கியத்தைக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதிய ‘பண்டாய சாகித்ய’ (கலக இலக்கியம்) இயக்கத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் பானு. ஆணாதிக்கம் நிறைந்த முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேர்மையோடும் துணிச்சலோடும் பதிவு செய்திருப்பதற்காக பானு முஷ்தாக்கின் எழுத்துக்கள் கொண்டாடப்படுகின்றன. இதுவரை ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். கர்நாடக சாகித்ய அகாடமி விருது, அத்திமப்பே விருது முதலிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘கரி நாகரகளு’ (கரு நாகங்கள்) என்ற அவரது சிறுகதை ‘ஹசீனா’ என்ற பெயரில் (2003) கன்னடத்தின் புகழ்பெற்ற இயக்குநர் கிரீஷ் காசரவள்ளியால் படமாக்கபட்டு பல பரிசுகளை வென்றிருக்கிறது. இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான Heart Lamp என்கிற தொகுப்புக்காக (மொழிபெயர்ப்பு: தீபா பஸ்தி) 2025ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு பெற்றார்.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website