• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

புளித்த அப்பம்

By ஜார்ஜ் ஜோசப்

புளித்த அப்பம்
Price$9.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப். இவரது கதைகள் வலுவான சம்பவங்களைக் கொண்டவை. அந்தச் சம்பவங் களைக் கதைகளாக்கும் கலைத்திறனும் மொழி ஆளுமையும் ஜார்ஜுக்கு இருக்கின்றன. எந்தக் கதையையும் குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் மட்டும் சொல்லாமல் கூடியவரையில் பலரது கோணங்களையும் கொண்டுவந்துவிடுகிறார். அவ்வகையில் இவரது கதையாடல் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று குறுநாவல் களும் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதோடு சமகால வாழ்வின் பரிமாணங்களையும் உணர்த்துகின்றன.

Details
Author
ஜார்ஜ் ஜோசப்
Publisher
Kalachuvadu Publications
Published date
19 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
5.5 in - 8.5 in
Pages
128 Pages
About The Author

இயற்பெயர் ஜோ. ஜார்ஜ் இம்மானுவேல். இயற்பியலை இளநிலையிலும் தமிழை முதுநிலையிலும் பயின்றவர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தகுதித் தேர்வில் தேர்ச்சி (JRF) பெற்றவர். தற்போது ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வினை முழுநேரமாக மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அச்சு, இணைய இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரை என எழுதிவருகிறார். ‘எமரால்ட்’, ‘பெருநெஞ்சன்’ ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளும் ‘பூனைகளில்லா உலகம்’, ‘இஸ்மாயில்’ ஆகிய இரு மொழிபெயர்ப்பு நாவல்களும் வெளிவந்துள்ளன. ‘எமரால்ட்’ தொகுப்பிற்காகத் திருக்கார்த்தியல் (2024) விருதும் ‘பெருநெஞ்சன்’ தொகுப்பிற்காகப் படைப்பு விருதும் (2025) பெற்றவர். தற்போது தாய், தந்தை, மனைவி மகனுடன் திருச்சியில் வசித்துவருகிறார். மின்னஞ்சல் : george.joshe@gmail.com தொலைபேசி : 9788784958

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website