• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

காலச்சுவடு - 316 | ஏப்ரல் 2026

By Kalachuvadu Publications

காலச்சுவடு - 316 | ஏப்ரல் 2026
Price$10.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

தலையங்கம் தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்: வைரமுத்துவிற்கு ஞானபீடப் பரிசு அறிவிக்கப்பட்டதால் எழுந்த எதிர்ப்புகளைப் பேசும் தலையங்கம். அவர் மீதான பாலியல் புகார்கள், எழுத்தின் ஆணாதிக்கக் கூறுகள், படைப்புத் தகுதி குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. அசல் படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு, அதிகாரத் தரப்பினருக்கே விருதுகள் வழங்கப்படுவதையும் விமர்சிக்கிறது. கட்டுரைகள் • இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷாபரிவார் என்னும் ஒட்டுவேலை | ஜி.என். தேவி (தமிழில்: அரவிந்தன்): மத்திய அரசின் புதிய மொழியியல் கொள்கையைச் சான்றுகளுடன் மறுக்கும் கட்டுரை. • காவல் இறப்புகள் - நிர்வாகத் தோல்வியா? | முத்துக்குமார் மா: தொடரும் லாக்கப் மரணங்களை வெறும் நிர்வாகச் சிக்கலாகப் பார்க்காமல், திராவிட சித்தாந்தத்தின் கட்டமைப்புக் குறைபாடாக அணுகும் கட்டுரை. • புகழ்மொழி வீச்சம் | பெருமாள்முருகன்: வைரமுத்துவின் ஞானபீடப் பரிசு சர்ச்சையையும் விருதுக்கான அதிகார அரசியலையும் விமர்சிக்கும் கட்டுரை. • காசியில் பெரியார் | செ. செந்தில் பிரகாஷ்: பெரியாரின் காசிப் பயணம், அங்கு அவர் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. • இஸ்தான்புல்: இருவேறு உலகங்களின் நகரம் | ஸர்மிளா ஸெய்யித்: துருக்கியின் முஸ்தபா கெமால் அதாதுர்க் உருவாக்கிய மதச்சார்பற்ற தேசிய அடையாளத்திற்கும், மத அரசியல் போக்கிற்கும் இடையிலான முரண்களைப் பேசும் கட்டுரை. • ஈரான் போர்: எப்படித் தொடங்கியது? எவ்வாறு முடியும்? | மு. இராமனாதன்: ஈரான் போரின் தீவிரத்தையும், உலகளாவிய விளைவுகளையும் அலசும் விரிவான கட்டுரை. • பதிவு: சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு கருத்தரங்கு | வேதவல்லி இலக்கியம் - படைப்புகள் • மொழிபெயர்ப்புக் கதை: பூட்டனாரும் பேய்பூதங்களும் | மி.ஜே.து. தம்பிமுத்து (தமிழில்: எழுத்துக்கினியவன் – அனுஜா பிரகாஷ்) • கதை: இருவர் | கனகா வரதன் • கவிதை: நீருக்கு என்ன நினைவிருக்கும்? | மம்தா சாகர் (தமிழில்: ஜி.ஏ. கௌதம்): • கவிதை: முந்நூறு குழந்தைகள் | சுகுமாரன் அஞ்சலிகள் • ஆர். நல்லகண்ணு (1925-2026) | ச. தமிழ்ச்செல்வன் • யூர்கென் ஹேபர்மாஸ் (1929-2026) | இரா. அழகரசன் • ஆர். பார்த்தசாரதி (1934-2026) | சுகுமாரன் • கே.என். பணிக்கர் (1936-2026) | பிரதீப் பனங்காடு • வ. ஜெயதேவன் (1947-2026) | பெருமாள்முருகன் • மதிப்புரை: அமுதா செல்வியின் ‘மையிருளி’ | ஸ்டாலின் சரவணன் • கடிதங்கள்

Details
Author
Kalachuvadu Publications
Publisher
Kalachuvadu Publications
Published date
31 Mar, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
8.27 in - 11.69 in
Pages
80 Pages
About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website