• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

காலச்சுவடு இதழ் 318 (2026 ஜூன் )

By Kalachuvadu Publications

காலச்சுவடு இதழ் 318 (2026 ஜூன் )
Price$10.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

காலச்சுவடு இதழ் 318 (2026, ஜூன்) தலையங்கம்: தமிழகத்தில் இரு துருவங்களான திமுக, அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியடைந்த தவெக, புதிய அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது. இக்கட்சியின் எழுச்சியையும் திமுக, அதிமுக கட்சிகளின் வீழ்ச்சிகளையும் தலையங்கம் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்துகிறது. கட்டுரைகள்: விஜய் எனும் புலப்பாடு - சுயமரியாதையின்மையின் வெளிப்பாடு (க. திருநாவுக்கரசு) கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலுக்கும் திரையுலகிற்குமிடையே நெருக்கமான பிணைப்பு இடையறாது தொடர்ந்துவருகிறது. அதே சமயத்தில் பிற துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் புகழடைந்திருந்தபோதிலும் பொதுவெளியில் தலைவர்களாக முடிவதில்லை. இதற்கான காரணங்களையும் வெகுஜன அரசியல் பார்வைகளையும் இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது. மறைந்த மதச்சார்பின்மை - அரசியல் சொல்லாடல்களின் மாற்றங்கள் (ஸ்டாலின் ராஜாங்கம்) திராவிடக் கட்சிகளின் பண்பாட்டுப் பார்வை வெகுமக்களோடு தொடர்புடையது இல்லை; சந்தர்ப்பங்களுக்காகவும் தேர்தல் நேரத்திற்காகவும் மாற்றமடையக்கூடியது என்கிற சிக்கலான பார்வையை இக்கட்டுரை தீவிரமாக அணுகுகிறது. ஈரான் போர்: எங்கே நிற்கிறது இந்தியா? (மு. இராமநாதன்) அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ள சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்குமான உறவு, எரிபொருள் தேவை, அங்கு பணியாற்றிவரும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் அரசியல் முடிவுகளை இக்கட்டுரை விவாதிக்கிறது. நீட் என்னும் வன்கொடுமை (க. துளசிதாசன்) நீட் தேர்விற்குமட்டும் ஓராண்டுக் காலம் தனியாகப் படித்து வர வேண்டிய சூழலில், நீட் தேர்விற்குமட்டுமே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டிய நிலையில் அனைத்துப் பள்ளிகளும் தள்ளப்பட்டு வருவதை இக்கட்டுரை ஆதாரத்துடன் நிறுவுகிறது. நேர்காணல்: “தமிழர் மெய்யியல் பன்முகமானது” – இரா. முரளி. நேர்கண்டவர்: தொ. பத்தினாதன். அஞ்சலி: ரகு ராய் (1938 - 2026) – வைட் ஆங்கிள் ரவிஷங்கரன் துரை. சீனிசாமி (1944 - 2026) – கோ. சந்தனமாரியம்மாள் இ. சுந்தரமூர்த்தி (1942 - 2026) – பெருமாள்முருகன் கதைகள்: நகரத்தில் போர்ஹெஸ் – ஹோஸே எடுவார்டோ ஆகுவாலூஸா (தமிழில்: யுவன் சந்திரசேகர்) கவிதைகள்: கவிதா முரளிதரன் பதிவுகள்: அரவிந்தன்: காலச்சுவடுக்குப் பேரிழப்பு (ஜி. ஐசக் அருள்தாஸ்) ‘அனக்கம்’ சமூகப் பண்பாட்டு இலக்கிய அமைப்பின் 110ஆவது மாதாந்திரக் கூடுகையில் நடைபெற்ற டி. ஐ. அரவிந்தன் அஞ்சலி குறித்த நிகழ்வின் பதிவு. தன்யனானவர் (தி. அ. ஸ்ரீனிவாஸன்) ஏப்ரல் 26 அன்று ‘நெய்தல்’ அமைப்பின் சார்பாக நடந்த அரவிந்தன் அஞ்சலிக் கூட்டத்தின் பதிவு. மதிப்புரை: சங்க இலக்கியம்: உடல் மனம் மொழி (களந்தை பீர்முகம்மது) முன்னுரை: மொழிபெயர்ப்புக் கலையின் நுட்பங்கள் (கண்ணன்) மொழிபெயர்ப்பு குறித்து பத்மா அமர்நாத் தொகுத்த 'முகத்துவாரம்' தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை. புவியின் சாட்சி (செ. இரா. செல்வகுமாரன்) தன் வாழ்வு முழுவதையும் இயற்கை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்த ‘சர்’ டேவிட் அட்டன்பரோவின் வயது 100ஐக் கடந்துவிட்ட நிலையில், அவரது பங்களிப்புகள் குறித்த கட்டுரை.

Details
Author
Kalachuvadu Publications
Publisher
Kalachuvadu Publications
Published date
4 Jun, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
8.27 in - 11.69 in
Pages
80 Pages
About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website