காலச்சுவடு இதழ் 319 (2026 ஜூலை)

About This Book
காலச்சுவடு 319 (2026 ஜூலை) தலையங்கம்: கடந்த திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தின்போது புத்தகக் காட்சிகளை வணிகமாக மட்டும் பார்க்காமல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்பட்டு, செயல்பட்டு வந்ததையும் கல்விக்கழகம் தமிழ்நாடு அரசுப் பதிப்பகமாக உருவாகி ஆய்வு நூல்களை வெளியிட்டதோடு ஒரு சமூகத்தின் அரிய வரலாற்று ஆவணங்கள் சாமானிய மனிதருக்கும் ஆய்வாளருக்கும் தடையின்றி எட்டக்கூடியதாக அமைந்திருந்தன. கட்சி அரசியலைக் கடந்து தமிழ் மொழியும் அறிவும் விரிவடையவும் விரிவுபடுத்தப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கருத்தை முன் எழுதப்பட்ட தலையங்கம். கட்டுரைகள்: ஈரான் போர் நிறுத்தம் வென்றவர் யார்? (மு. இராமனாதன்) கடந்த பிப்ரவரி மாதம் ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும், அணு ஆற்றலும் ஏவுகணைகளும் அழிக்கப்பட வேண்டும், தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கிவரும் ஆதரவுகளை நிறுத்த வேண்டுமென ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரிட்டன. ஜூன் மாதம்வரை நீடித்த இப்போர் தற்போது அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை நிறுத்தப்பட்டன. இப்போரில் யார் வென்றார், யாருக்கு இழப்பீடு என்று புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்கும் கட்டுரை. மெதுவாக சுவாசிக்கும் இளவரசர் தீவுகள் (ஸர்மிளா ஸெய்யித்) இஸ்தான்புல்லின் கரையோரத்தில் மார்மரா கடலின் நடுவே பரவிக் கிடக்கும் தீவுகளில் ஒன்றான அடலார் தீவுகள் குறித்த சுவாரஸியமான (பயண) கட்டுரை. 247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும் (சச்சிதானந்தன் சுகிர்தராஜா) ரோபர்ட் கொல்ட்வெல், ஜி. யூ. போப் இருவரும் தமிழ் எழுத்துகளை நீக்கி அதன் இடத்தில் ரோமன் எழுத்துகளை எழுதியதை அடிப்படையாகக் கொண்டிருந்ததையும் தமிழ் எழுத்துகளில் ரோமனாதிக்கம் ஏற்பட்டதையும் விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரையின் ஒரு பகுதி. பதிவு: இன்றும் என்றும்-3 மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும் (ராமச்சந்திர குஹா தமிழில்: மருதன்) புதிய பத்தி: மெய்யுரைப்பேன் மனமே! ‘அக்கா, அங்க பாரு’ (ரேவதி) அஞ்சலி: பாரதிராஜா (1941-2026) ஸ்டாலின் ராஜாங்கம் பல்லடம் மாணிக்கம் (1936-2026) கண. குறிஞ்சி மு. பரமசிவம் (1934-2026) ஆ.இரா. வேங்கடாசலபதி சிறுகதைகள் தீ இனிது (பெருமாள்முருகன்) பாடிங்க்டன் கரடி (கோகுலக்கண்ணன்) கவிதைகள்: ப. நீலாராமன் பதிவுகள்: பயன்தெரி பனுவாலாளர் (இஸ்க்ரா) ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர் மருதனைக் கொண்டாடும் விதமாக நடந்த மருதன்-50 என்ற நிகழ்வின் பதிவு. செந்தமிழ் பதிப்புச் செம்மல் (தி.ஆ. ஸ்ரீ) திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு முதல் உ.வே.சா.வின் பெயரால் செந்தமிழ் பதிப்புச் செம்மல் என்ற விருதை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் விருது முனைவர் ப. சரவணனுக்கு வழங்கபட்ட நிகழ்வு குறித்த பதிவு. உரை: தமிழ்ப் புனைவுகளில் சுற்றுச் சூழல் ஓர்மை (அரவிந்தன்) மார்ச் 07-08இல் ‘புரவி’ இலக்கியக் கூடுகை நிகழ்வில் அமரர் அரவிந்தன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். மதிப்புரை: சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை (ம. சோனியா) தொகுப்புரை: கலையை எழுதுதல் (எம். கோபாலகிருஷ்ணன்) காலச்சுவடு ஜூலையில் வெளியிடும் ‘வாழ்வை மீட்டிய கலை’ நூலிற்கான தொகுப்புரை. இந்நூல் கவிஞர் சுகுமாரன் எழுதிய இசை ஓவியம் நடனம் திரை குறித்த கட்டுரைகள் அடங்கியதாகும். திரை: நீளிரா (சொர்ணவேல்)
Details
- Author
- Kalachuvadu Publications
- Publisher
- Kalachuvadu Publications
- Published date
- 1 Aug, 2026
- Type
- Paperback
- Cover finish
- Matte
- Interior
- Standard Black & White
- Dimensions
- 8.27 in - 11.69 in
- Pages
- 79 Pages