காலச்சுவடு இதழ் 321 (2026 செப்டம்பர்)
தலையங்கம்: த.வெ.க.வின் நூறு நாள்கள் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான த.வெ.க. அரசின் நூறு நாள் செயல்பாடுகளை விவாதிக்கும் தலையங்கம்.


தலையங்கம்: த.வெ.க.வின் நூறு நாள்கள் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான த.வெ.க. அரசின் நூறு நாள் செயல்பாடுகளை விவாதிக்கும் தலையங்கம்.



கனிமவளக் கொள்ளையின் பாதிப்புகள் முதல் இந்திய மொழிகளின் சிற்றிதழ் இயக்கம் வரை… தலையங்கம்: தமிழகத்தில் கனிம மாஃபியாக்களின் வன்முறையும் அரசின் நிலைப்பாடும் சிறப்புப் பகுதி: இந்தியச் சிற்றிதழ்கள் (தமிழ், இந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம், வங்காளம்) நேர்காணல்: "நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்" – இயக்குநர் மீரா கதிரவன் கட்டுரை: ஆக்ஸ்போர்டு கையடக்க அகராதி ஆய்வு – இ.



காலச்சுவடு 319 (2026 ஜூலை) தலையங்கம்: கடந்த திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தின்போது புத்தகக் காட்சிகளை வணிகமாக மட்டும் பார்க்காமல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கருதப்பட்டு, செயல்பட்டு வந்ததையும் கல்விக்கழகம் தமிழ்நாடு அரசுப் பதிப்பகமாக உருவாகி ஆய்வு நூல்களை வெளியிட்டதோடு ஒரு சமூகத்தின் அரிய வரலாற்று ஆவணங்கள் சாமானிய மனிதருக்கும் ஆய்வாளருக்கும் தடையின்றி எட்டக்கூடியதாக அமைந்திருந்தன.



காலச்சுவடு இதழ் 318 (2026, ஜூன்) தலையங்கம்: தமிழகத்தில் இரு துருவங்களான திமுக, அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியடைந்த தவெக, புதிய அரசியல் சக்தியாக உருவாகியுள்ளது.



காலச்சுவடு 317 (மே 2026) 1.



தலையங்கம் தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்: வைரமுத்துவிற்கு ஞானபீடப் பரிசு அறிவிக்கப்பட்டதால் எழுந்த எதிர்ப்புகளைப் பேசும் தலையங்கம்.



பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் நீட்சியாக உருவான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல், ஒரே சம்பவத்தின் மாறுபட்ட சாத்தியக் கூறுகளைப் பற்றிய சிந்தனைக்கான வாசல்களைத் திறந்துவைக்கிறது.



தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப்.



கடைசியில் எல்லாம் பெண்களின் கேள்விகளில் வந்துநிற்கின்றன. ஏன், எதற்கு என்று அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.



2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்ற பானு முஷ்தாக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.



-‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ கட்டுரைத் தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்ட திருக்குமரன் கணேசனின் கதைகள் இவை.



பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன.



இளம் பிராயத்தின் தீவிரத்தில் வாழ்வையும் வாழ்வுக்கான பொருளையும் தேடும் பெண்களது ஊடாட்டம் காலவோட்டத்தில் மெல்ல நிலைகொள்ளும்போது தெளிந்தோ, மங்கியோ ஒரு புதிய வண்ணத்தை ஏற்கிறது.



-குழந்தைகளுடன் பழகும்போது எத்தனையோ அதிசயங்கள் நிகழும். ஒரு எண்ணக்கீற்று தானாக மேலெழுந்து கவிதையாக, எழுத்தாக, இசைப் பாடலாக, நாடகமாக உருமாறும்.



இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன். மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன்.



-1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா.



-அளவான உரையாடல் பகுதிகளையும் விரிவான விவரணைப் போக்கையும் தன் பலமாகக் கொண்டுள்ள கதைகள் இவை. எல்லாக் கதைகளிலும் விசாரணை தொனி மையமென இழையோடு கிறது.



எல்லாப் பயணங்களும் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. பயணம் தரும் அனுபவம் ஒருபுறம் இருக்க, பயணமே ஓர் அலாதியான அனுபவம்தான்.



-உலக இலக்கியங்களைச் சிறுசிறு மொழிபெயர்ப்பு களாலும் கட்டுரைகளாலும் அறிமுகப்படுத்திய பாரதி, வங்காளத்தின் இலக்கிய, அரசியல் முன்னோடிகளின் கவிதை, கதை, கட்டுரை, உரைகளை மிகுதியாகத் தமிழாக்கியுள்ளார்.



-எனது இசையுடன் நான் கொண்டுள்ள உறவு மிகவும் அந்தரங்க மானது.
